ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

...................

அப்படியொரு பனிக்காலம்

இனி வராமல் போகலாம்

என்னோடு நான் முழுமையாக இருந்தேன்

கனவோ , கற்பனையோ , காட்சிப்பிழையோ அல்ல .

தேடல் அத்தனைக்கும் தேனாயிருந்தாள்

என்னவளை அறிமுகப்படுத்தினேன்

பிறந்த குழந்தை தவழ்வது போல் தவழ்ந்து

வளர்ந்து , கிளர்ந்து _ இன்று

அவளாகவே இருக்கிறாள் .

அவளுக்கான எல்லைக்கோட்டில்

பிரபஞ்சத்தை பெரிதாக்குகிறேன் .இன்னும்

கேட்டுக்கொண்டே இருக்கிறாள் _ ஆமா !

உன்னுள் நானெப்படி ?

4 கருத்துகள்:

கலா சொன்னது…

தேடல் அத்தனைக்கும் தேனாயிருந்தாள்\\\\\\\\

இப்போது...!!!..??


வளர்ந்து , கிளர்ந்து _ இன்று
அவளாகவே இருக்கிறாள் .
அவளுக்கான எல்லைக்கோட்டில்\\\\\\\

தாண்டவே இல்லையா?
அன்பின் ஆழமா? காதலின்
ஆழமா? இக் கவிதை பாரதி

சின்னபாரதி சொன்னது…

கவிதை வாசகரின் எண்ணத்தேடல்களுக்கு விருந்தாய் அமைந்தால் !? கவிதைக்கு வெற்றி

ஹேமா சொன்னது…

பாரதி..நிறைய எழுதிருக்கிறீர்கள்.அடிக்கடி வரமுடியவில்லை.இன்று எல்லாமுமாக ரசித்தேன்.காதலும் ஆசையும் அதன் தேடலும்.
அற்புதமான படைப்புக்கள்.
தொடருங்கள்.வருவேன்.

சின்னபாரதி சொன்னது…

நன்றி ஹேமா . வருகைக்கும் வாழ்த்துக்கும் மற்றும் ஊக்கத்துக்கும்.