சனி, 4 செப்டம்பர், 2010

வானம் வசப்படும்

நாங்கள்
ஏழ்மைக்கும் இல்லாமைக்கும்
தகுதியானவர்கள்

உழைப்புக்கும்
களைப்புக்கும் உறவுக்காரர்கள்

பட்டினிக்கும்
நோய்க்கும் சந்தாதாரர்கள்

பதவிமானுக்கும்
பணக்காரருக்கும் கடனாளிகள்

முயற்சிக்கும் நாங்கள்
வெற்றிக்குத் தகுதியானவர்கள்

இவ்வானம்
ஒருநாள் வசப்படும் .

7 கருத்துகள்:

ராதா சொன்னது…

///இவ்வானம்
ஒருநாள் வசப்படும் . ///

தம்பி நீங்க 9999 ஆள் இப்படி வசப்படும் வசப்படும்னு பினாத்திக்கிட்டு .....

கிறுக்கன் சொன்னது…

///காதல் முதல் கவிதைவரை.....
///

hahahahahah பைத்தியம் பைத்தியம்

பிரபஞ்ச அழகன் சொன்னது…

காதலாம் கத்திரிக்காயம் கவிதையாம்

மீனாகுமாரி சொன்னது…

//பிரபஞ்ச அழகன் கூறியது...
காதலாம் கத்திரிக்காயம் கவிதையாம்
//

அய்யோ அய்யோ....

சத்ரியன் சொன்னது…

வானம் ஒரு நாள் பொடி படும்.
வெற்றியைக் கொண்டாடி வெடி போடும் போது.

சின்னபாரதி சொன்னது…

///காதல் முதல் கவிதைவரை.....

காதல் உங்களைக் காச்சியெடுத்திருக்கும் போலத் தெரியுது.

உங்களை மனசில் வச்சிக்குறேன் .

உங்களைப்பற்றி என் மனம் .....

காதல் பிடிக்காததிற்கு நீங்கள் தந்தையராக இருக்கலாம் அல்லது காதலிக்கு உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம் .


கவிதையை ஏன் ? பிடிக்கலை என பின் சொல்கிறேன் பிரபஞ்ச அழகன்

சின்னபாரதி சொன்னது…

ராதா கூறியது...
///இவ்வானம்
ஒருநாள் வசப்படும் . ///

தம்பி நீங்க 9999 ஆள் இப்படி வசப்படும் வசப்படும்னு பினாத்திக்கிட்டு .....


பதில் : உலகத்தின் வெற்றிகளை உற்றுப்பாருங்கள் சிறு நெருப்பு எங்கோ ஒரிடதில் ஏற்றப்பட்டதாக இருக்கும் .

நம்மைச்சுற்றி நாமறிவோம்
எவரேனும் நம்மை அறிவர் .

வானம் இல்லையென்று சொல்வதும் மாயையென்று ஒப்புவதும் அறிவியல் .

நம்பிக்கையில்லாத இடத்தில் விதை பதரே!