திங்கள், 13 செப்டம்பர், 2010

ஆகசுட்டு _ 15

இளைய சமுதாயமே !
அறிவாய் அறியாமையை

சுதந்திர நாள் ?
கொடியேற்றி இனிப்பு தந்து அரசுவிடுமுறை . ,
மறந்திட முடியுமா ?

என்றோ ! ஒருநாள் ...
அடிமையாய் இருந்தோம் என்பதை
அறிவுருத்தும் நாளல்லவா ?

காயங்கள் ஆறினும்
வடுக்கள் மிச்சமிருக்கிறதே ! மீண்டும் ஏன் ?
பகைமையிடம் தோழமை .

அன்று ... சந்தைக்கு இடம் கொடுத்து
சந்தித்த அவலம் மறந்தீரோ ?

அரசியலாரின் விருப்பமென்னவோ !
வரலாற்றில் பெயர் வீற்றிருந்தால் ? போதுமென்றால் ...

மக்கள் நலன் மண்ணிற்கு
இரையாகமல் மீளுமோ ?

இன்னுமொரு காந்தியில்லையே !
அடியும் மிதியும்பட்டு அகிம்சையோடு
சுதந்திரம் வாங்க ...

இன்னுமொரு சுபாசுமில்லையே !
சுதந்திரப் படைதிரட்ட ...

இன்னுமொரு நேருமில்லையே !
தலைமையேற்று வழிநடத்த ...

இன்னுமொரு அண்ணலில்லையே !
அரசியல் சட்டம் இயற்ற ...

இன்னும் பிற தியாகிகளில்லையே !
தீக்கிரையாகிட ...
செக்கிழுத்திட ...
தூக்கை முத்தமிட ...
கம்பிக் கதவறையில் கரைந்து போக ...

அய்யோ ! அவலம் அறிவாய் அறியாமையை

இளைய சமுதாயமே ! அந்நியம் தவிர் !
தேசம் கார் ,
சுதந்திரம் பேண் .





6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நாட்டுப்பற்றுக் கண்டு மெய் சிலிர்த்துப்போகிறேன் பாரதி !

சின்னபாரதி சொன்னது…

கவியரசர் கண்ணதாசனை செய்தியாளர் ஒருவர் கேள்வி தொடுத்திருக்கிறார் .

செய்தியாளர் : சென்றவருடம் நீங்கள் ஆதரித்து பேசிய கருத்தை இந்நாளில் மறுக்கிறீர்ளே ?

கவியரசர் : காலையில் நான்விடும் அறிக்கையை மாலையில் மறுத்து அறிக்கை விடுகிறவன் நான் ., இதைப்போய் பெரிதாக பேசுகிறீர்களே ! என்றாராம் .

எனக்கும் கவிதை எழுதிய நாளில் இருந்த மனநிலை அப்படி ...

வருகைக்கு நன்றி !

கலா சொன்னது…

சுதந்திரநாள் என்று....
கேட்டும், படித்தும்,எழுதியும்..
இருக்கின்றோம்
ஆனால் சில....
வகைகளில் இன்னும் சுதந்திரமான
சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை

அதிலும்......சில
நாடுகளில்..!!!...????

உங்கள் உணர்சின் வடிகால்
தேங்கி நிற்கிறது வரிகளில்
நன்றி பற்றுணர்வாளரே!

சின்னபாரதி சொன்னது…

உண்மைதான் கலா !

இந்தியா இன்றும் ஏழடுக்கு பாதுகாப்புடன்தான் கோட்டையில் கொடிஏற்றுகிறது

நன்றி !

ரிஷபன் சொன்னது…

மக்கள் நலன் மண்ணிற்கு
இரையாகமல் மீளுமோ ?
இந்த குமுறல் அப்படியே பல மனங்களின் பிரதிபலிப்பு.

சின்னபாரதி சொன்னது…

திரு,ரிஷபனின் முதல் வருகைக்கும் கருத்து பரிமாற்றியமைக்கும்
நன்றி !