சனி, 4 செப்டம்பர், 2010

நகுலன் என்றொரு கவிதை

வலிய தேடலுக்குப்பின் ...

பசுமைப்புல் வளர்ந்த
வீட்டுவெளி

பழமையாய் ஒரு மிதிவண்டி
தோழமையாய் பூனை

தொங்கித்தூங்க
நாடா கட்டில்

இவருக்கென
இவர்கூட இல்லையாம் ?

காலம் தமிழுக்கு தந்த முதிர்ச்சியை
இவரிடமும் வாங்கிப்போனது

தமிழே! நீ
தங்கி வளர்ந்து , விவாதித்து
செழிப்புற்று ,செம்மைப்பட்டு
வெளியேறிய ...
பெரிய மனதுக்காரனின்
சிறிய வாழ்க்கையை வளமாக்கவில்லையே ?

தீந்தமிழே !
இதுபோல் தீர்ந்துபோகாதே .

குறிப்பு:
(நகுலனின் இறப்பால் எழுந்த இறந்துயரல் நாம் காலாண்டிதலுக்காக )

கருத்துகள் இல்லை: