சனி, 18 செப்டம்பர், 2010

உவமைக்கவி

தனக்கென்ற பாணியை வைத்தாலும்
தாசனின் தாசனாகவே வாழ்ந்தாய் .

உன் உவமைகள் உவமேயத்தை _ மட்டும்
சிறப்பிக்கவில்லை .,
தமிழையும் சிறப்பித்தது .

உவமேயத்தை சிறப்பிக்கும்
உவமையல்ல _ நீ
உவமையை சிறப்பிக்கும்
உவமையே ! _ நீ

உன் இழப்பையும் , இடத்தையும்
நீயின்றி நிரப்புவாரில்லை .,

ஆறுதலுக்கு உவமையென்ன கண்டாய்
அவ்வுவமை ஆற்றுமா ? எம்மனதை .,

உவமை பெற்றெடுத்த ...
உவமையே !

அறிவியல் ஆயுளை நீட்டிக்கவில்லையே !
இருந்திருந்தால் ?
அருகுபோல் இருப்பாயே !

உன் இழப்பு
யாப்பிற்கோ ! பேரிழப்பு .,

பாரதிதாசா ! உன் புகழை செப்பணிட்ட
சிற்பியை இழந்தோம் .,

தமிழே ! _ நீ
யாப்பின் உளியை இழந்தாய் .,

விழுதுகள் பற்றாத நிலையில்
வேரறுந்ததே !
விருட்சகமென்னவாகுமோ ?

அடிக்கரும்பைப்போல் தமிழில் _ உன்காலம்
இனித்துக்கொண்டே ! இருக்கும் .,

உன் உவமை ...
தமிழின் பெருமை .

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

உவமைக் கவியை இழந்த தவிப்பும் வேதனையும் வரிகளில் தெரிகிறது பாரதி.

சின்னபாரதி சொன்னது…

நன்றி ! ஹேமா ..., வருகைக்கும் , கருத்துரைக்கும் .