ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

நினைவுத் தீ

நீண்ட நெடிய தேடலுக்குப்பின் ...

நீ வர... காற்றின் தவம் களைகிறது

உடைதிருத்தி என்னருகில் அமர்கிறாய்

பூத்த முகங்களோடு என்னை விழியில் எடுக்கிறாய்

மெளனம் களைகிறாய்...

பேச மறந்த விசயங்களென ...பேசி மகிழ்கிறாய்

தொடர்புகள் துண்டித்த போது தொங்கிய வார்த்தைகள் பேசுகிறாய்

தாமதத்திற்கு வருந்தி முகம் பார்க்கச் சொல்கிறாய்

கொடிபிடித்து விளையாடுகிறாய்

நம்மை தாண்டிச்செல்லும் வண்ணத்துபூச்சி கேட்கிறாய்

தம்பியிடம் பறித்த கடலைமிட்டாய் தருகிறாய்

இப்படியே ! சேர்ந்தே இருக்க வரம் கேட்கிறாய்

மணல்கூட்டி இருபெயரெழுதி அழிக்க முயல்கிறாய்

தடுத்து நிறுத்த கைகள் நீள்கின்றன ... காணமல் போகிறாய் நீ !?

4 கருத்துகள்:

கலா சொன்னது…

கவிஞரே..! கனவா?
இல்லை,இறந்தகாலமா?
இல்லை. கை மாறலா?

என் கேள்விக்கென்ன பதில்..????

கனவில,,கூடப் பெண்தானா?
ஏன் வேறு யாரும் வரமாட்டேனென
அடம் பிடிக்கின்றார்களா?

நினைவுத் தீ.....
ரொம்பத்தான் வாட்டி வதைக்கின்றதோ..!!??

நன்றாக நினைவு வைத்து மூட்டிய தீ
காய்கிறது என் இரசனையில் நன்றி

சின்னபாரதி சொன்னது…

கலாவிற்கு கேள்வி ஞானம் அதிகம்...

எனக்கோ ! பதில் ஞானம் குறைவு

(தப்பிக்க வேறுவழி தெரியவில்லை)

நன்றி வருகைக்கும் கேள்விக்கும்

ஹேமா சொன்னது…

கலா கேட்கிற கேள்விக்குப் பதில் சொன்னால் கவிதையின் கருவே மாறிப்போகும் பாரதி.

சின்னபாரதி சொன்னது…

ஆமா ! ஹேமா ! பள்ளியிலே கணக்கு வாத்தியார்கிட்டே தப்பிக்கிற மாதிரி இருக்கு .

வேலைச்சுமைக்கும் மத்தியில் வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு இருவருக்கும் நன்றிகள் .